ஜாதகத்தில் லக்கினம் என்றால் என்ன?

ஜாதகத்தில் லக்கினம் என்றால் என்ன அதன் முக்கியத்துவம் என்ன அதை எவ்வாறு ஜோதிடர்கள் கணக்கிடுகிறார்கள். அதன் பண்புகள் மற்றும் தாக்கங்கள் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஜோதிடம் என்பது நம்  பண்டைய காலத்தில் இருந்து மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவர்களின் எதிர்காலத்தை புரிந்து கொள்ள உதவும் ஒரு அறிவியல் மற்றும் கலை வடிவம் தான் ஜோதிடம்.

இந்த ஜோதிடத்தில் பல அம்சங்கள் உள்ளன அதில் மிக முக்கியமான அம்சமாக லக்கினம் இருக்கிறது.

லக்கினம் என்றால் என்ன?

லக்கினம் என்பது ஒரு நபரின் பிறந்த நேரத்தில் கிழக்கு திசையில் உயரும் ராசியை குறிக்கிறது இது ஜாதகத்தின் முதல் வீடு என்று அழைக்கப்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் 12 வீடுகள் இருக்கின்றன இவை ஒவ்வொன்றும் ஒருவரின் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களை பிரதிபலிக்கிறது அவற்றின் முதல் வீடு அதாவது லக்கினம் ஒருவரின் ஆளுமை உடல் அமைப்பு ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையின் பொதுவான தகவல்களை தருகிறது.

லக்கினம் என்பது ஒருவரின் ஜாதகத்தின் தொடக்கப் புள்ளியாக கருதப்படுகிறது. 

இது ஒரு மனிதரின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும் ஒரு அடிப்படையாக காரணியாக உள்ளது. 

இதை ஒரு வீட்டின் அடித்தளதோடு  ஒப்பிடலாம் அடித்தளம் வலுவாக இருந்தால்  மட்டுமே முழு கட்டிடத்தையும் நிலையாக நிறுத்த முடியும் அதேபோலத்தான் லக்கினம் ஒருவரின் வாழ்க்கையில் அடித்தளமாக இருப்பதால் இதன் தாக்கம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

லக்கினத்தின் முக்கியத்துவம்?

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது ஒரு நபரின் அடிப்படை இயல்புகளை வெளிப்படுத்துவதோடு அவரின் வாழ்க்கையில் நிகழும் பல நிகழ்வுகளை புரிந்து கொள்ள இது உதவுகிறது.

 லக்கினம் இல்லாமல் ஒரு ஜாதகத்தை முழுமையாக புரிந்து கொள்ள இயலாது ஏனெனில் மற்ற கிரகங்களின் நிலைகள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் லக்கினத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது.

லக்கினம் ஒருவரின் உடல் அமைப்பு அவரின் மனநிலை ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையில் எதிர்கொள்ள போகும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி தகவல்களை தெரிவிக்கிறது.

உதாரணமாக ஒருவருக்கு மேஷ லக்னமாக இருந்தால் அவர் தைரியமானவராகவும் தலைமை பண்பு கொண்டவராகவும் இருக்கலாம். அதே போல விருச்சக லக்கினமாக ஒருவர் இருந்தால் அவர் மர்மமானவராகவும் உணர்ச்சி மிக்கவராகவும் இருக்கலாம்.

லக்கினத்தை எவ்வாறு கணக்கிடுவது?

லக்கினத்தை கணக்கிடுவது என்பது மிகவும் ஒரு துல்லியமான செயல்முறையாகும். இதற்கு ஒருவரின் பிறந்த தேதி நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவை மிகவும் துல்லியமாக தெரிந்திருக்க வேண்டும்.

இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து தான் ஜோதிடர்கள் ஒரு ஜாதகத்தை உருவாக்குகிறார்கள் பிறப்பு நேரத்தில் கிழக்கு திசையில் உயரும் ராசியே லக்கினமாக கருதப்படும்.

லக்கினம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் மாறுபட்டு கொண்டு இருக்கும் என்பதால் பிறப்பு நேரம் சரியாக இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

 உதாரணமாக ஒரு நாளில் 24 மணி நேரம் உள்ளது மற்றும் ராசிகளும் 12 உள்ளன எனவே ஓவ்வொரு ராசிக்கு சராசரியாக 2 மணி நேரம் கிழக்கு திசையில் உயர்ந்திருக்கும். பிறப்பு நேரத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட லக்கினம் மாறி ஜாதகத்தின் முழு விளக்கத்தையும் மாற்றி அமைத்து விடும்.

Read More: உத்திரட்டாதி நட்சத்திரம் பலன்கள், குணங்கள்

லக்கினத்தின் பண்புகள்

லக்கினம் ஒருவரின் ஆளுமை உடல் அமைப்பு மற்றும் ஆரோக்கியத்தை பற்றி தகவல்களை கொடுக்கிறது ஒவ்வொரு ராசியும் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளன அவற்றின் சில உதாரணங்களை இங்கே பார்ப்போம்.

மேஷ லக்கினம்

மேஷ லக்னம் உள்ளவர்கள் தைரியமானவர்களாகவும், தலைமை பண்பு கொண்டவர்களாகவும் மற்றும் எதிலும் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு உடல் வலிமையும் அதிகமாகவே இருக்கும்.

ரிஷப லக்கினம்

ரிஷப லக்கினம் உள்ளவர்கள் எதிலும் நிலையானவர்களாகவும். பொறுமையானவர்களாகவும் மற்றும் ஆடம்பரத்தை விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள்.

மிதுன லக்கினம்

மிதுன லக்கினம் உள்ளவர்கள் புத்திசாலியாகவும் சிறந்த பேச்சுத் திறன் கொண்டவர்களாகவும் மற்றும் எந்த காரியத்திலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

கடக லக்கினம்

கடக லக்கினம் உள்ளவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள் தங்களின் குடும்பத்தை மிகவும் நேசிப்பார்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அதிகமாக விரும்புவார்கள்.

சிம்ம லக்கினம்

சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், எதிலும் கவனத்தை ஈர்ப்பவர்களாகவும் இருப்பார்கள் மற்றும் தலைமை பண்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

கன்னி லக்கினம்

இவர்கள் மிகுந்த பகுத்தறிவு மிக்கவர்களாக இருப்பார்கள் ஒழுக்கம் மற்றும் தன்னைச் சுற்றி சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

துலாம் லக்கினம்

துலாம் லக்னம் உள்ளவர்கள் மிகவும் அமைதியானவர்கள் அழகை நேசிக்கக் கூடியவர்கள் மற்றும் உறவுகளில் அனைவரையும் சமமாக இருக்க வேண்டும் என்று விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள்.

விருச்சிக லக்கினம்

விருச்சக லக்கினத்தில் உள்ளவர்கள் மிகவும் மர்மமாகவே இருப்பார்கள் மிகுந்த உணர்ச்சி மிக்கவர் மற்றும் எப்போதும் ஆழமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.

தனுசு லக்கினம்

தனுசு லக்கினத்தில் பிறந்தவர்கள் மிகவும் நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் ஆதித சுதந்திரத்தை விரும்பக் கூடியவர்கள் மற்றும் பயணங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மகர லக்கினம்

மகர லக்கினத்தில் உள்ளவர்கள் மிகவும் பொறுப்பானவர்களாகவும் கடினமான உழைப்பாளிகள் ஆகும் திகழ்வார்கள் மற்றும் இவர்களையும் இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டே இருப்பார்கள்.

கும்ப லக்கினம்

கும்ப லக்கினம் உள்ளவர்கள் எதிலும் புதுமையாக யோசிக்க கூடியவர்களாகவும் சுதந்திரமாக சிந்திக்க கூடியவர்களாகவும் மற்றும் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

மீன லக்கினம்

மீன லக்னம் உள்ளவர்கள் எப்போதும் மிகப் பெரிய கனவுகளை கண்டு கொண்டு இருப்பார்கள், அதிக உணர்ச்சி மிக்கவர்களாகவும் மற்றும் ஆன்மீகத்தை அதிகம் விரும்பக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இவ்வாறு ஒவ்வொரு லட்சணமும் ஒருவரின் ஆளுமையை பல்வேறு விதமாக வெளிப்படுத்துகிறது.

Read More: Google AdSense மூலம் அதிக வருவாய் ஈட்டுவது எப்படி?

லக்கினத்தின் பலம் மற்றும் பலவீனம்

ஒருவரின் வாழ்க்கையில் லக்கினத்தின் படம் முக்கிய பங்கு வைக்கிறது.

 லக்கினம் வலுவாக இருந்தால் தான் அவரின் நல்ல ஆரோக்கியம் தன்னம்பிக்கை மற்றும் வெற்றியை குறிக்கும்.

மாறாக லக்கினம் பலவீனமாக இருந்தால் அது உடல் நலக்குறைவு மன அழுத்தம் மற்றும் வாழ்க்கையில் தடைகளை குறிக்கும்.

லக்கினத்தின் பலத்தை தீர்மானிக்க லக்கின அதிபதியின் நிலை, லக்கினத்தில் உள்ள கிரகங்கள், லக்கினத்தின் உள்ள தோற்றங்கள் போன்ற காரணிகள் முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன.

 ஜாதக பொருத்தத்தில் லக்கினத்தின் முக்கியத்துவம் 

ஒருவரின் திருமண ஜாதக பொருத்தத்தில் லக்கினம் மிக முக்கியமான காரணியாக பார்க்கப்படுகிறது.

ஆண் பெண் இரு ஜாதகங்களில் லக்கினங்கள் பொருந்தினால் அது நல்ல உறவு, புரிதல் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கும் மாறாக லக்கினங்கள் பொருந்தாவிட்டால் அது உறவில் பல சிக்கல்களையும் மோதல்களையும் ஏற்படுத்தலாம்.

உதாரணமாக ஒரு மேஷ லக்கினத்தில் உள்ளவரும் துலாம் லக்கினத்தில் உள்ளவரும் பொருத்தமாக இருக்கலாம் ஏனெனில் இவை எதிர் ராசிகளாக உள்ளன மற்றும் ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்யும் தன்மையும் கொண்டவை.

 ஆனால் மேஷ லக்கினமும் விருச்சிக லக்கினமும் சில சமயங்களில் மோதல்களை ஏற்படுத்தலாம் ஏனெனில் இந்த இரண்டும் ஆக்ரோஷமான தன்மையை கொண்டவை.

எனவே திருமண ஜாதக பொருத்தத்தில் லக்கினத்தின் பங்கு மிக முக்கியமானதாகும்.

லக்கினத்தை புரிந்து கொள்வதன் நன்மைகள்

லக்கினத்தை புரிந்து கொள்வதன் மூலம் ஒருவர் தனது வாழ்க்கையின் பலம், பலவீனம் மற்றும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

 இது ஒருவரின் தன்மையை மேம்படுத்தவும் அவரது வாழ்க்கையை சிறப்பாக திட்டமிடவும் உதவுகிறது உதாரணமாக ஒருவருக்கு பலவீனமான லக்கினம் இருந்தால் அதை வலுப்படுத்த ஜோதிடத்தில் பரிந்துரைக்கப்படும் பரிகாரங்களை பின்பற்றலாம்.

ஜோதிடத்தில் லக்கினத்தின் முக்கியத்துவத்தை ஒருபோதும் மறுக்க முடியாது ஏனெனில் இது ஒரு ஜாதகத்தின் அடிப்படையாகவும் வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *