விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்களின் சமீபத்திய பேட்டிகள் தான் தற்போது தமிழக அரசியல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.
ஆதவ் அர்ஜுனா அவர்களின் பேட்டியில் திமுகவை சரமாரியாக கேள்வி கேட்டு திமுகவினரை தினறடித்துள்ளார்.
இதற்கு பதிலடி தரும் அளவில் திமுக ஆராசாவை களத்தில் இறக்கி விட்டது.
திமுக கூட்டணியில் விரிசல்.? அதிர்ச்சி கொடுக்கும் விசிக
ஆ.ராசாவோ ஆதவ் அர்ஜுன் அரசியல் முதிச்சியற்றவர் அர் மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பாஜகவின் கைக்கூலி என்றும் சரமாரியாக ஆதம் அர்ஜுனை விமர்சனம் செய்தார்.
இதற்கு திரும்ப தக்க பதிலடி தரும் வகையில் ஆதவ் அர்ஜுனா அவர்கள் அண்ணன் ஆ ராசா ஏன் வேங்கை வயலில் பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்ட போது அங்கே செல்லவில்லை பிறகு திமுக தான் சமூக நீதியின் அடையாளம் என்று சொல்கிறது அப்படிப்பட்ட திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆர் ராசா அவர்கள் ஏன் தன் சொந்த தொகுதியான பெரம்பலூரில் இருந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் சென்று போட்டியிட்டார் இதுதான் திமுகவின் சமூக நீதியா என்று சரமாரியான கேள்வியுடன் திமுக மீதும் திமுக விற்கும் ஆ.ராசாவிற்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இதனிடையே ஆதவ் அர்ஜுனின் இந்த நடவடிக்கையை விசிகவின் மூத்த நிர்வாகிகளான ரவிக்குமார், ஆளூர் ஷாநவாஸ், வன்னி அரசு, பாலாஜி போன்றவர்கள் இவரின் கருத்தை ஏற்கவில்லை.
பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி
இவர்கள் நால்வரும் திமுகவின் முழு நேர உறுப்பினர் போல திமுகவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்கள் இது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது விசிகவின் தொண்டர்களோ ஆதம் அர்ஜுனா அவர்கள் என்ன தவறாக பேசி விட்டார் அவர் நம் கட்சியின் கொள்கையை தானே எடுத்துப் பேசினார் இதற்கு ஏன் திமுகவை விட நமது கட்சியின் மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஒரு கட்சியை ஆரம்பிக்கும் போது அதன் தலைவர் முதல்வராக வர வேண்டும் என்ற எண்ணம் தான் அதன் தொண்டர்களுக்கு இருக்கும் அல்லது நல்ல அதிகார பகிர்வை பெற வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும் அதுதான் விசிகவின் கொள்கையும் கூட இதை ஆதம் அர்ஜுனா பேசியதற்கு ஏன் நம் கட்சியின் சீனியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் இதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே ஆதவ் அர்ஜுனாவை இதுவரை விசிக தலைவர் திருமாவளவன் கண்டிக்கவில்லை இது மேலும் திமுக தரப்பை எரிச்சல் அடைய செய்துள்ளது ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கள் திருமாவளவன் அனுமதியுடன் தான் நடக்கிறது என்று திமுக தரப்பு தனது ஐடிவிங்கை வைத்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
திமுக தன்னை எதிர்த்த கட்சிகளை ஒருபோதும் சும்மா விட்டதில்லை முன்பு மதிமுக அடுத்து, தேமுதிக இப்படி பல கட்சிகளை உடைத்து அவர்களின் அரசியல் எதிர்காலத்தை காலி செய்துள்ளது.
இதே மாதிரி தன் விசுவாசிகளான விடுதலை சிறுத்தைகல் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், ஷாநவாஸ், வன்னியரசு, பாலாஜி போன்றவர்களை வைத்து திமுக தரப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியை உடைக்க திட்டம் போட்டு இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது..
எது எப்படியோ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்களின் கருத்தை விசிகவுக்குள் எப்படிப்பட்ட தாக்கங்களை உருவாக்கி இருக்கிறது என்பதை வெளியில் இருந்து பார்க்கும்போது தெரிபவை இரண்டு விசயங்கள் தான்.
ஒன்று : அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் அல்லது அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள் ஆதவ் அர்ஜுனாவின் கருத்தை ஏற்கவில்லை.
இரண்டு : கட்சி அதிகாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், விசிகவில் இருக்கும் இளஞ்சிறுத்தைகள் ஆதவ் அர்ஜுனாவின் கருத்தை கொண்டாடுகிறார்கள்.
Pingback: மேயரை விட அதிகமா லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம்
Pingback: போதை பொருட்களின் தலையிடமா சென்னை?
Pingback: செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை