உத்திரட்டாதி நட்சத்திரம் பலன்கள், குணங்கள்

27 நட்சத்திரத்தில் 26 வது நட்சத்திரம் தான் உத்திரட்டாதி நட்சத்திரம். நீதிக்கும், நேர்மைக்கும் உரியவரான சனி பகவானை அதிபதியாக கொண்ட மூன்றாவது நட்சத்திரமாகும் இது. மீன ராசியில் நான்கு பாதகங்களை கொண்ட நட்சத்திரம் உத்திரட்டாதி நட்சத்திரமாகும்.

இந்த சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியில் பிறந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் நீதியுடனும், நேர்மையுடன் உண்மைக்கு பயந்து ஒழுக்கத்தோடு வாழ நினைப்பவர்களாக இருப்பார்கள்.

எப்பேற்ப்பட்ட நெருக்கடியான சூழ்நிலை வந்தாலும் நடுநிலையோடு தவறாது உண்மையோடு செயல்படக் கூடியவர்கள். சொன்ன சொல் தவறாது கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றக் கூடியவர்கள்.

அதிகமான பயணங்களை விரும்பக்கூடியவர்களாக இருப்பார்கள் பெரும்பாலும் சொந்த ஊரில் இருக்க மாட்டார்கள், வெளி ஊர்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடு என சுற்றிக் கொண்டே இருப்பார்கள் , இவர்கள் மிகப்பெரிய பயண விரும்பிகளாக இருப்பார்கள்.

உத்தரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் சாணக்கியத்தோடு செயல்படக்கூடியவர்கள்.எந்த ஒரு காரியத்தையும் இவர்களிடம் ஒப்படைத்தால் மிகவும் சிறப்பாக செய்து முடிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

எந்த பணியில் இருந்தாலும் அங்கே தலைமை பொறுப்பில் இருப்பவர்களை இவளின் கைக்குள் கொண்டு வந்து விடுவார்கள் அந்த அளவிற்க்கு கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.

தெய்வம் : சிவபெருமான்
மரம் : வேம்பு
பட்சி : மயில்
தமிழ் பெயர்: முரசு

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் எத்தனை பாதங்கள்?

உத்திரட்டாதி நட்சத்தில் மொத்தம் நான்கு பாதங்கள் உள்ளது அதில் ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களும் ஒவ்வொரு குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.

முதல் பாதம்

சனி பகவானின் நட்சத்திரம், குரு பகவானின் ராசியான மீன ராசியில் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவாம்ச அதிபதி சூரிய பகவான் ஆவார்.

இவர்கள் யாரிடமும் அதிகாரத்தை காட்ட விரும்ப மாட்டார்கள். நேர்மையோடு வாழ்கள், அன்புக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்.

அதே நேரத்தில் தன்னிடம் பழகுபவரும் அதே போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தான் சொல்ல வந்ததை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலை உடையவர்களாக இருப்பார்கள்.

தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள், தன்னோடு கூட இருப்பவர்களையும் தன்னம்பிக்கையோடு வைத்திருப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்க்கு ஒரு போதும் தயங்க மாட்டார்கள். பெரிய மனிதர்களோடும், பெரிய பிரபலங்களோம் நெருக்கிய நட்பு வைத்திருப்பார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரதின் இரண்டாம் பாதம்

சனி பகவானின் நட்சத்திரம், குரு பகவானின் ராசியான மீன ராசியில் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவாம்ச அதிபதி புதன் பகவான் ஆவார்.

பண்டைய தொன்மையை கலாச்சாரம் பண்பாடு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். தனது வாழ்க்கை துணைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

அவர்களின் திறமைக்கு மதிப்பளித்து அவற்றை வெளிக்கொண்டுவர முயற்ச்சிப்பார்கள்.

இவர்கள் ஏற்றுக்கொள்ளத எந்த விசயத்தையும் மற்றவர்களிடம் திணிக்க மாட்டார்கள், மிகுந்த கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள்.

யாராவது இவர்களை புகழ்ந்து பேசினால் இவர்கள் அதை விரும்பவும் மாட்டார்கள். தனது குழந்தைகளிடம் நண்பரை போல பழக்கூடியவர்களாக இருப்பார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரதின் மூன்றாம் பாதம்

சனி பகவானின் நட்சத்திரம், குரு பகவானின் ராசியான மீன ராசியில் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவாம்ச அதிபதி சுக்கிர பகவான் ஆவார்.

குழந்தை பருவத்தில் இருந்தே மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். கூட பிறந்தவர்கள் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

எந்த ஒரு செயலை செய்தாலும் அதை மற்றவர்கள் போல் வழக்கமானதை செய்யாமல், அதில் இவர்கள் ஏதாவது இரு புதுமையை விசயத்தை சேர்த்து மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள்.

இவர்களுக்கு கற்பனை திறன் அதிகம் இருப்பதால் கலை துறையின் மீது மிகுந்த ஈடுபாடோடு இருப்பார்கள். எழுத்து துறையிலும் சிறந்து வழங்குவார்கள். இவர்களின் செயல்பாடுகள் எப்போதுமே தனித்தன்மையோடு இருக்கும்.

எப்போதும் மகிழ்ச்சியாகவும் அடுத்தவர்களிடம் அன்பாகவும் செயல்படுவார்கள். தெய்வ பக்தி இவர்களிடம் அதிகம் காணப்படும். இயற்கையை மிகவும் ரசிப்பார்கள் இயற்க்கையோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரதின் நான்காம் பாதம்

சனி பகவானின் நட்சத்திரம், குரு பகவானின் ராசியான மீன ராசியில் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவாம்ச அதிபதி செவ்வாய் பகவான் ஆவார்

பேச்சு சார்ந்த தொழில் சிறந்து விளங்குவார்கள், விவாதங்களில் இவர்களை யாரும் எளிதில் வெல்ல முடியாது. எதிலும் விவேகத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பண்பாடு கலாச்சாரத்தின் மீது பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். குறிப்பாக வீரம் சார்ந்த விளையாட்டுகளில் ஆர்வமாக இருப்பார்கள்.

அடிக்கடி கோவப்படுவார்கள் பயங்கராமான முன் கோபிகள் அதே நேரத்தில் அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் தாங்க மாட்டார்கள். பெற்றோர்கள் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள்.

தன்னோட குழந்தைகள் ஒழுக்கத்தோடு தான் இருக்க வேண்டும் என்று கண்டிப்போடு இருப்பார்கள்.

ஊர் பொதுக்காரியங்களில் தலையேற்று சிறப்பாக நடந்தி முடிப்பர்கள், ஆபத்தில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்ற ஓடோடி உதவி செய்வார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரம் பொதுப்பலன் குணங்கள்

மென்மையான இளகிய மணம் கொண்டவர்களாகவும் மிகுந்த இறக்க குணம் கொண்டர்களாகவும் இருப்பார்கள். எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.

தோல்வியை கண்டு துவண்டு போகாமல் அடுத்தகட்ட வேலையை பார்க்க சென்று விடுவார்கள்.

படிப்பில் சுமாராக தான் இருப்பார்கள் ஆனால் அந்த படிப்பிற்க்கு நிகரான அறிவோடு இருப்பார்கள். அறிஞர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அறிவோடு இருப்பார்கள்.

அடுத்தவர்களுக்கு அட்வைஸ் அதாவது போதனைகள் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். மன விரக்தியடைத்தவர்கள் இவர்களிடம் பேசினால் புத்துணர்ச்சி பெறுவார்கள். பேச்சின் மூலம் பல காரியங்களை சாதித்துக்கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்களின் பெரிய பலமே இவர்களின் பேச்சு தான்.

என்ன ஒன்னு கோவம் வந்தால் மிகுந்த முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். அதிக பிடிவாத குணம் கொண்டர்களாக இருப்பார்கள். எந்த காரியத்திலும் பிடிவாதமாக இருந்து அதில் வெற்றியும் காண்பார்கள்.

யாருக்காகவும் எதற்க்காகவும் தனது குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலானவர்கள் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். இது தான் இவர்களின் மைனஸ் என்று கூட சொல்லலாம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் வாழ்க்கை முறை

நண்பர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு இவர்கள் உதவி செய்வார்களே தவிர அவர்களிடம் எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பார்க்க மாட்டார்கள். யாருக்காகவும் எதற்க்காகவும் போலியான வாழ்க்கையை ஒரு போதும் வாழ மாட்டார்கள் இருப்பதை வைத்து கொண்டு நிறைவாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள்.

மற்றவர்களுக்கு உதவக்கூடிய தியாக மனப்பான்மையோடு இருப்பார்கள். தான தர்மம் அதிகம் செய்ய வேண்டும் என்று வாழக்கூடியவர்கள். யாருடைய தயவும் இல்லாமல் தாமாக சுயமாக முன்னேற வேண்டும் என்ற எண்ணை உடையவர்கள்.

உத்தரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிறைய விசயங்களை தெரிந்து வைத்திருந்தாலும் ஒன்றுமே தெரியாத மாதிரி இருப்பார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரம் திருமண வாழ்க்கை முறை

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனைவி குழந்தைகளுக்காக வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். கலாச்சாரம், பண்பாடு, நாட்டுப்பற்று, மொழிப்பற்றோடு வாழக்கூடியவர்கள். தன் குடும்பத்தினரும் அவ்வாறே வாழ வேண்டும் நினைப்பவர்கள்.

Read More: Google AdSense மூலம் அதிக வருவாய் ஈட்டுவது எப்படி?

தொழில்

எந்த தொழில் செய்தாலும் அதில் நேர்மையான முறையில் வருமானம் வரவேண்டும் என எண்ணக்கூடியர்கள். குறிப்பாக குறுக்குவழி இவர்களுக்கு செட் ஆகாது.

வங்கித்தொழில், கட்டுமானத்துறை, ஜாதகம், இடைத்தரகு, கலை துறையில் சிறந்து விளங்குவார்கள்.

படிப்பில் சுமாராக இருந்தாலும் இவர்கள் தேர்ந்தெடுத்துச் செல்லும் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

எந்த வேலையாக இருந்தாலும் அதை எளிதில் கற்றுக்கொண்டு உடனே சிறப்பாக செயல்படும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சொந்த ஊரில் தொழில் செய்வதைவிட வெளி ஊர்கள், வெளி நாடுகளில் இவர்களின் தொழில் அல்லது வேலை சிறப்பானதாக இருக்கும்.

உடல்நிலை

சனிபகவோட ராசியான உத்தரட்டாதி நட்சத்திகாரர்கள் பிற்க்கும் போதே சனி திசையோ பிறப்பார்கள். பிறந்த காலகட்டங்களில் நீர் சார்ந்த கண்டங்களோ பிரச்சனைகளோ வந்திருக்க வாய்ப்பு உண்டு.

அடிக்கடி வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரும் குறிப்பாக அஜீரண கோளாருகள் வர வாப்புகள் அதிகம். அடிக்கடி மருந்து மாத்திரைகள் உட்கொள்பர்களாக இருப்பார்கள் அதனால் உடல் உள் உறுப்புகள் பாதிக்க வாய்ப்புகள் உண்டு. உடல்நிலை சார்ந்த விசயங்களில் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு முறைகள்

உத்திரட்டாதி நட்சத்திரம் சனி பகவானின் நட்சத்திரம் என்பதலால் வாரம் ஒரு முறையாவது ஆஞ்சனேயர் மற்றும் விநாயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவேண்டும்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக அடிக்கடி உங்கள் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு வந்தால் கஷ்டங்கள் குறைந்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்ப்படும்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *