நாளை பிற்பகல் 3.30 க்கு தமிழக அமைச்சரவை மாற்றம் அரங்கேற இருக்கிறது.
அந்த அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறதாம்.
இதனால் யாரிடம் இருந்து இலாக்கா பறிக்கப்படுமோ என்று திமுகவின் மூத்த அமைச்சர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.
இதனிடையே மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் மூன்று பேர் அமைச்சராக வர இருக்கிறார்களாம்.
முத்துச்சாமியிடம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை மீண்டும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படுகிறதாம்.
மத பிரச்சினைக்காக வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டாரா?
திமுகவின் கடந்தகால வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்வி துறைக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறாராம்.
இதை திமுகவினர் இப்போதே பெருமையாக பேசிக்கொள்கிறார்களாம் ஆனால் இந்த புரட்சியை மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பள்ளிக்கல்வி துறை அமைச்சராக்கி அப்போதே புரட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை அமைச்சரவையில் இருந்து தூக்கிவிட்டு இன்னொரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருக்கிறதாம்.
மனோ தங்கராஜிடம் இருந்த பால் வளத்துறையும் வேறு ஒருவருக்கு கைமாறுகிறதாம்.
எது எப்படியோ உதநிதியின் கனவு நிறைவேற போகிறது ஆனால் திமுக அரசின் மூத்த அமைச்சரும் திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகனோ பெரும் கோபத்தில் இருக்கிறாராம்..
அண்ணா காலத்தில் இருந்து அரசியலில் இருக்கிறேன் துணை முதல்வர் பதவியை எனக்கு கொடுக்காமல், நான் பார்த்து பிறந்து வளர்ந்த பையனுக்கு துணை முதல்வர் பதவியை கொடுக்கிறார்கள் என்று தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் புலம்பிவருகிறாராம் துரை முருகன்.
போதை பொருட்களின் தலையிடமாக மாறிவருகிறதா சென்னை.?
சனாதனத்தை ஒழிக்கப்போகிறேன் என்று சொல்லும் கட்சி திமுக, ஆனால் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து மட்டுமே முதல்வர் ஆகமுடியும் என்று செயல்படுவதுதான் ஒரிஜினல் சனாதனம் என்று திமுகவினர் பேசிக்கொண்டே அடுத்து இன்பநிதி வாழ்க என்று சொல்ல தயாராகிக்கொண்டிருந்தனர்…
Pingback: உதயநிதியை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர் பிடிஆர் -
Pingback: BJPக்கு எதிராக செயல்பட்டதால் தூக்கப்பட்ட மனோதங்கராஜ் -