மதுரை மத்திய தொகுதியின் MLAவும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் இருந்து வருபவர் பிடிஆர்.தியாகராஜன் இவர் நீண்ட நெடிய திமுக பாரம்பரியத்தை கொண்ட ஒருவர் ஆவார்.
ஆனால் இன்று நடந்த அமைச்சரவை மாற்ற நிகழ்வுக்கு வராத ஒரே அமைச்சர் பி டி ஆர்.தியாகராஜன் மட்டும்தான்.
உதயநிதி துணை முதல்வர்.. அதிருப்தியில் துரைமுருகன்.!
ஏற்கனவே இவர் திமுக தலைமையின் மீது அவர்களின் குடும்பத்தின் மீதும் முப்பதாயிரம் கோடி பணம் சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று இவர் பேசியதாக ஒரு ஆடியோவும் வெளியாகி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோ என்னுடையது அல்ல என்று பி.டி.ஆரும் மறுக்கவில்லை இதனால் திமுக தலைமை இவர் மீது கோபம் கொண்டு அவர் வகித்து வந்த நிதி அமைச்சர் பதவியை பறித்துவிட்டு தகவல் தொழில்நுட்ப துறையை வழங்கியது.
அதே நேரத்தில் இவரை மீடியா மற்றும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவும் தடை விதித்தது திமுக தலைமை.
இதனால் பி டி ஆர். தியாகராஜன் திமுக தலைமை மீது மிகுந்த அதிர்ப்தியில் இருந்து வருகிறார் அதன் வெளிப்பாடே இன்றைய அமைச்சரவை மாற்ற நிகழ்வுக்கு கலந்து கொள்ளவில்லை என்றும் பேசப்படுகிறது..
இதனால் கூடிய விரைவில் அடுத்த அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என நாம் எதிர்பார்க்கலாம்.
Pingback: BJPக்கு எதிராக செயல்பட்டதால் தூக்கப்பட்ட மனோதங்கராஜ் -