வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி ஊழல் செய்ததாக திமுகவால் தொடரப்பட்ட வழக்கில் கடந்த வருடம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து 471 நாட்கள் புனல் சிறையில் அடைக்கப்பட்டார், பின்பு பலமுறை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும் ஜாமீன் கிடைக்காத நிலையில் இன்று அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.
மேயரை விட அதிகமான லிப்ஸ்டிக் போட்டதால் இடமாற்றம்
செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது அதில் அரசு தரப்பு சாட்சிகளை தொடர்பு கொண்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மொத்தம் 24 பக்கங்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் செந்தில் பாலாஜிக்கு முக்கியமாக ஆறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நிபந்தனையை பொறுத்தவரை செந்தில் பாலாஜி 20 லட்சம் பிணைத் தொகையை செலுத்த வேண்டும்.
செந்தில் பாலாஜி நேரடியாகவோ அல்லது மறைமுகமாக அரசு தரப்பு சாட்சிகளையோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களையோ தொடர்பு கொள்ள கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை மீறி அவர்களை செந்தில் பாலாஜி தொடர்புகொள்ள முயற்சித்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
விசிகவை உடைக்க திட்டம் போடும் திமுக..??
அதேபோல ஒவ்வொரு திங்கள் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 12 மணி வரை தமிழக அமலாக்கத்துறையின் இணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதி மன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள் முன்பு ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதேபோல இந்த நிபந்தனைகளை எல்லாம் விசாரணை நீதிமன்றத்தில் நிறைவேற்றி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் ஜாமீனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு வழக்குகள் செந்தில் பாலாஜி மீது நிலுவையில் உள்ளது ஒன்று சிறப்பு நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்கு.
இரண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு இந்த இரண்டு வழக்குகளையும் விரைந்து விசாரித்து முடிப்பதற்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வேடிக்கை என்னவென்றால் வழக்கு தொடுத்தது போராடியதும் திமுக ஜாமீன் எடுத்து கொண்டாடுவதும் திமுக தான்..
இதில் நகைச்சுவை என்றவென்றால் தமிழக முதல்வர் ஸ்டாலின், இவர் கட்சி திமுக தொடுத்த வழக்கில் ஜாமீனில் வெளிவரும் செந்தில் பாலாஜியை “உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது” என வாழ்த்து ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அதற்க்கு பலதரப்பட்ட மக்களும் கலாய்த்து வருகிறார்கள்.
Pingback: போதை பொருட்களின் தலையிடமா சென்னை?
Pingback: மதப்பிரச்சினையில் வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டாரா?