கன்னியாகுமரி மாவட்டத்தின் திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், பத்மநாதபுரம் எம்எல்ஏவுமான மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து தூக்கப்பட்டது தான் தற்போது அரசியலில் பரபரப்பாக உள்ளது.
இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் இவருக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதும் மிகப்பெரிய நெருக்கம் உண்டு.
அதே நேரத்தில் மத அரசியல் மிகக் கடுமையாக நடைபெறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவிற்கு எதிராக மிகக் கடுமையாக வேலை செய்து வந்தவர் மனோ தங்கராஜ் இவர் பிரதமரையும் பாஜகவினரின் மிகக் கடுமையாக தனது சோசியல் மீடியா பக்கங்களிலும் பொது வழியிலும் பேசிவந்தார் இது பாஜகவினரிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி வந்தது.
உதயநிதியை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர் பிடிஆர்
இதனால் தற்போது பாஜகவுடன் மிக நெருங்கிய நட்பில் இருக்கும் திமுக தலைமையால் பழிவாங்கப்பட்டாரா என்று தற்போது மக்களால் பேசப்படுகிறது.
அதற்கு வலு சேர்க்கும் விதமாக மனோ தங்கராஜ் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை பதிவேற்றி உள்ளார் அதில் முக்கியமாக
“மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்“
என்று பதிவு செய்துள்ளார் இதனை ஆராய்ந்து பார்க்கும் போது பாஜகவின் அரசியலுக்கு எதிராக கன்னியாகுமரியில் அரசியல் செய்த காரணத்தினால் தான் பழிவாங்கப்பட்டதாக எழுதியுள்ளாரா என்று பொது மக்களிடையே பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
திமுக என்பது ஒரு சந்தர்ப்பவாத கட்சி 1999 வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு கொடுத்து, வாஜ்பாயின் அரசு ஐந்தாண்டு காலம் தொடர்ந்து நீடிப்பதற்கு அவர்களின் நம்பிக்கை குறைய கூட்டணி கட்சியாக இருந்து வந்தது இவர்கள் கூட்டணியில் இருந்த போது தான் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குஜராத் கலவரங்கள் போன்ற பல விரும்பதகாத சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறியது.
தற்போது திமுக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்தாலும் தன் விசுவாசத்தை பாஜகவிடமே காட்டி வருகிறது திமுக அதற்கு உதாரணமாக கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் வெங்காய நாயுடுவை அழைத்து சிலை திறந்தார்கள்.
கருணாநிதியை நாணய வெளியீட்டு விழாவிற்கு மத்திய அமைச்சர் ராத்நாத் சிங்கை வரவைத்து அந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள் இதெல்லாம் பார்க்கையில் பாஜக திமுக நல்ல நெருக்கத்தில் இருக்கிறது என்று எல்லோரும் புரிந்துகொள்ள முடிகிறது.
பாஜக திமுக நல்ல நெருக்கத்திற்கு வந்த பிறகு திமுகவில் உள்ள அமைச்சர்கள் யாரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்ததில்லை மனோ தங்கராஜ் ஒருவர் மட்டுமே பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் அதனால் தான் பழிவாங்கப்பட்டோமா என்று ஆதங்கத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தி உள்ளாரா என்று நினைக்க தோன்றுகிறது.
உதயநிதி துணை முதல்வர்.. அதிருப்தியில் துரைமுருகன்.!
மனோ தங்கராஜின் டுவிட்டர் பதிவு இதோ.
2021 – தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.
2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன்.
இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி!
மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்.