சர்வதேச போதை பொருட்களின் தலைமையிடமாக மாறி வருகிறதா சென்னை.
இன்று சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்புள்ள 112 கிலோ போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது சென்னையில் பரபரப்பாகியுள்ளது.
சென்னையில் இருந்து ஆஸ்ட்ரேலியாவுக்கு செல்லவிருந்த கண்டெய்னரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர் இதில் 420 மூட்டைகளில் மெடஸ், மற்றும் கற்களை பாலிஸ் செய்யும் பவுடர்கள் இருந்துள்ளது அப்போது அடிப்பாகத்தில் சூடோ எபிடரின் என்ற போதை பொருள் 37 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்றம்
சர்வதேச அளவில் 110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிடரின் போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட ஷிப்பிங் ஏஜெண்டுகள் அபுதாஹிர், அகமது பாஷா என்ற இருவரை கைது செய்து விசாரித்ததில் அவர்கள் பல முறை சென்னையில் இருந்து ஆஸ்த்ரேலியாவிற்கு போதை பொருள் கடத்தியது தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் சென்னை துறைமுகத்தில் 50 கோடி மதிப்பிலான போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்த பரபரப்பு அடங்குவற்க்குள் மீண்டும் இந்த நிகழ்வு நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த முன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் சாதரணமாக கஞ்சா, போதை மாத்திரைகள் சர்வதேச போதை பொருட்கள் பிடிபடுவது அதிமாக நடைபெறுவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசிகவை உடைக்க திட்டம் போடும் திமுக..??
ஏற்கனவே திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் என்ற சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Pingback: மதப்பிரச்சினையில் வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டாரா?
Pingback: உதயநிதி துணைமுதல்வர், அதிருப்தியில் துரைமுருகன்