கடந்த அதிமுக ஆட்சியில் தமிழர் மானம், தமிழர் பெருமை, தமிழர் அரசியல் பற்றி வாரம் இரண்டு அறிக்கை விடும் நடிகர் கார்த்தி இப்போது பவன் கல்யாண் இடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டிருப்பது தமிழர்களிடையே பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் கார்த்திக் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் தான் மெய்யழகன்.
இந்த மெய்யழகன் படத்தை ஆந்திராவில் வெளியிட அதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்று கலந்து கொண்டார் நடிகர் கார்த்திக், அந்த நிகழ்ச்சியில், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லட்டு பற்றி சில கேள்விகள் கேட்டார் அதற்கு நடிகர் கார்த்தி நகைச்சுவையுடன் பதில் அளித்தார்.
திமுக கூட்டணியில் விரிசல்.? அதிர்ச்சி கொடுக்கும் விசிக
இதனால் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.
பவன் கல்யாண் கூறியதாவது.
“திரைப்பட விழாவில் நடிகர் ஒருவர் திருப்பதி லட்டு குறித்து பேசுவதை கண்டேன். அவ்வாறு பேசுவதற்கு உங்களுக்கு துணிவு எங்கிருந்து வந்தது. ஒரு நடிகனாக உங்களை மதிக்கிறேன். ஆனால் சனாதன தர்மம் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கு முன்பு 100 முறை யோசித்து பேசவேண்டும்”
என்று மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் பவன் கல்யாண்.
இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் தன் மெய்யழகன் படத்தின் வெளியீட்டிற்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நடிகர் கார்த்தி பகிரங்கமாக ட்விட்டரில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் இது தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நகைச்சுவையாக நடந்த சம்பவத்தை திருப்பதி லட்டுடன் தொடர்புபடுத்தி எமோஷனலாக கண்டனம் தெரிவித்த பவன் கல்யாணிடம் இப்படி பகிரங்கமாக கார்த்திக் மன்னிப்பு கேட்பதா என்று அவரது ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
Pingback: திமுக கூட்டணியில் விரிசல்.? கதறவிடும் விசிக
Pingback: விசிகவை உடைக்க திட்டம் போடும் திமுக..??
Pingback: மேயரை விட அதிகமா லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம்