வங்கதேச அணி இந்தியாவிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் கான்பூரில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச கிரிக்கெட் அணியின் ‘சூப்பர் ரசிகரான’ டைகர் ராபி திடீரென குறைவால் அருகில் உள்ள மருத்துவமனையில் போலீஸாரால் சேர்க்கப்பட்டார்.
போதை பொருட்களின் தலையிடமாக மாறிவருகிறதா சென்னை.?
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, உலகில் எங்கெல்லாம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறதோ அங்கெல்லாம் வங்கதேச சூப்பர் ரசிகரான டைகர் ராபி வந்து தன் நாட்டு அணியை உற்சாகப்படுத்துவார்.
வழக்கம் போல் தன் நாட்டு அணியை உற்ச்சாகப்படுத்த கான்பூர் மைதானத்த்திற்க்கு வந்துள்ளார் வங்கதேச சூப்பர் ரசிகர் டைகர் ராபி.
பிடிஐ செய்தியால் வெளியிடப்பட்ட வீடியோவில், கான்பூரின் கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் இருந்து வங்கதேச சூப்பர் ரசிகர் ராபி புலி உடையில் அணிந்துகொண்டு, மார்பில் வங்கதேசக் கொடியுடன் நாற்காலியில் அமர்ந்திருப்பதை போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்றம்
அந்த வீடியோவில் ஒரு கும்பல் அவரைத் தாக்கியதாக வீடியோவில் இருந்த மக்கள் கூறுவதைக் கேட்க முடிகிறது.
இதையடுத்து அவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் தரப்பில் வங்கதேச ரசிகரை யாரும் தாக்கவில்லை அவர் உடல்நல குறைவால் தான் மருத்துமனையில் சேர்க்கப்பட்டார் என்று வீடியோ வெளியிட்டுள்ளார் கான்பூர் ACP கல்யாண்பூர் அபிஷேக் பாண்டே.
இதனிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்க்கு முன்னரே வஙக்தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று வங்கதேச அணிக்கு எதிராக இந்து வழக்கறிஞர்கள் மற்றும் விஸ்வ ஹிந்து பர்சத் அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளர்.
Pingback: உதயநிதி துணைமுதல்வர், அதிருப்தியில் துரைமுருகன்