விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளராக இருந்து வருபவர் தான் ஆதவ் அர்ஜுனா இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி தான் தற்போது திமுக வட்டாரத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.
இவர் கொடுத்த பேட்டியில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தாளும் கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணத்துக்கு துணை முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார் இதுதான் அரசியல் முயற்சி என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினை மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார்.
பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி
அடுத்து சினிமா நடிகர் துணை முதல்வர் ஆகும்போது ஒரு கட்சியின் தலைவரான திருமாவளவன் ஏன் முதல்வராக கூடாது என்று கேள்வியும் எழுப்பி உதயநிதியவும் சீண்டியுள்ளார் விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா.
இப்படி நேரடியாக திமுக தலைமையே விமர்சித்துள்ளது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விசிகவில் உள்ள மூத்த நிர்வாகிகளான எழுத்தாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியுமான ரவிக்குமார், ஆளூர் ஷாநவாஸ், வன்னியரசு, பாலாஜி போன்றவர்கள் விசிகவில் இருக்கும் தீவிரமான திமுக ஆதரவாளர்கள் இவர்களையும் ஆதவ் அர்ஜுனா அவர்களின் பேட்டி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
எங்கே சென்றார்கள் 40 MPகள் ? EPS கடுமையான விமர்சனம்
விசிகாவின் மூத்த நிர்வாகிகள் தாங்கள் திமுகவின் மீது வைத்துள்ள விசுவாசத்தை காட்ட ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளனர்.
திமுகவிற்கு எதிரான விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்களின் பேட்டியை யாரும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது ஆதவ் அர்ஜுனா அவர்கள் ஒரு தேர்தல் வியூக நிபுணரும் ஆவார் இவர் கடந்த காலங்களில் பல தேர்தல்களுக்கு வியூகம் அமைத்துக் கொடுக்கும் வேலைகளையும் பல கட்சியினருக்கு செய்து வந்துள்ளார் இவருக்கு நன்கு புள்ளி விவரங்கள் தெரியும் அப்படிப்பட்ட நபர் சாதாரணமாக திமுகவை உரசி பார்த்திருக்க மாட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
திமுக மீது விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீப காலங்களில் மிகக் கடுமையான அதிருப்தியில் இருந்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அதற்கு ஏற்றார் போல அவரின் வலதுகரமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்களின் பேட்டியும் பெரிய புகைச்சலை கூட்டணியில் உருவாக்கியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா அவர்கள் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதியோடுதான் பேட்டி கொடுத்துள்ளார் என்று திமுக வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கடுமையாக திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள்.
திமுக கூட்டணி மிக முக்கியமான கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது திமுகவுக்கு எதிராக திரும்பி இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Pingback: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி
Pingback: விசிகவை உடைக்க திட்டம் போடும் திமுக..??